ADDED : மார் 18, 2025 02:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூரில் மிதமான மழைஇதமான சீதோஷ்ணம்
தேன்கனிக்கோட்டை:ஓசூர், தேன்கனிக்கோட்டை தாலுகாவில், வெயில் வாட்டி வருகிறது. ஓசூர் நகர் பகுதியில் நேற்று மாலை, 4:05 மணிக்கு திடீரென பலத்த காற்று வீசியது. தொடர்ந்து மாலை, 4:15 மணிக்கு மேல், சாரல் மழை பெய்தது. அதேபோல், தேன்கனிக்கோட்டை அருகே அந்தேவனப்பள்ளி, மரக்கட்டா சுற்று வட்டார பகுதிகளில், நேற்று மாலை மிதமான மழை பெய்தது. கடும் வெயிலுக்கு மத்தியில் இதமாக மழை பெய்ததால், மாலை நேரத்தில் குளிர்ந்த காற்று வீசியது. தொடர் கோடை மழையை எதிர்பார்த்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளனர்.