/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கழிவு பொருளுடன் காந்திவி.சி.,யினர் வாக்குவாதம்
/
கழிவு பொருளுடன் காந்திவி.சி.,யினர் வாக்குவாதம்
ADDED : மார் 20, 2025 01:19 AM
கழிவு பொருளுடன் காந்திவி.சி.,யினர் வாக்குவாதம்
கெங்கவல்லி:கெங்கவல்லியில் ஒன்றிய அலுவலக கட்டடம் சேதமடைந்ததால், புது கட்டடம் கட்ட, 5.90 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் பழைய கட்டடங்களை அகற்றும் பணிக்கு, அலுவலகத்தில் உள்ள பொருட்கள், ஆவணங்கள், வேறு வாடகை கட்டடத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் பழைய கழிவு பொருட்கள் போட்டுள்ள இடத்தில், அம்பேத்கர், காந்தி படங்கள் நேற்று கிடந்தது. இதை அறிந்து, வி.சி., கட்சியினர் சென்று, பி.டி.ஓ., ரங்கராஜ் உள்ளிட்ட அலுவலர்களிடம் வாக்குவாதம் செய்தனர். பின் அங்கிருந்த படங்களை எடுத்துச்சென்றனர்.
ரங்கராஜ் கூறுகையில், 'காந்தி, அம்பேத்கர் படங்களை, மரத்தின் பகுதியில் சாய்த்து வைத்துள்ளனர். பொருட்களை அகற்றுவோர், கவனக்குறைவாக வைத்துள்ளனர். பின், அந்த படங்கள் எடுத்துச்செல்லப்பட்டன,'' என்றார்.