/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஈரோடு-ஜோலார்பேட்டைரயில் இயக்கத்தில் மாற்றம்
/
ஈரோடு-ஜோலார்பேட்டைரயில் இயக்கத்தில் மாற்றம்
ADDED : மார் 26, 2025 01:37 AM
ஈரோடு-ஜோலார்பேட்டைரயில் இயக்கத்தில் மாற்றம்
சேலம்:ஈரோடு - ஜோலார்பேட்டை ரயில் இயக்கத்தில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:ஜோலார்பேட்டை பகுதியில், மறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், மார்ச் 29, 30 ஆகிய தேதிகளில் காலை, 6:00 மணிக்கு கிளம்பும் ஈரோடு - ஜோலார்பேட்டை ரயில், திருப்பத்துார் வரை மட்டுமே இயக்கப்படும். மறு மார்க்கத்தில், மார்ச் 29, 30 தேதிகளில் மதியம், 2:45 மணிக்கு கிளம்பும் ஜோலார்பேட்டை - ஈரோடு ரயில், திருப்பத்துாரிலிருந்து கிளம்பும். இரு மார்க்கத்திலும், திருப்பத்துார் முதல் ஜோலார்பேட்டை வரை சேவை ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.