ADDED : மார் 27, 2025 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குடிநீர் கேட்டு மக்கள் தர்ணா
இடைப்பாடி:கொங்கணாபுரம், கோரணம்பட்டி ஊராட்சி, சிப்காட் வளாகம், துணை மின்சார நிலைய பகுதிகளில், 120க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். அங்கு, 10,000 லிட்டர் கொள்ளளவில் மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது.
அதன்மூலம் வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டது. ஆனால் அந்த தொட்டி அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளது என கூறி, அதன் மூலம் குடிநீர் வழங்க முடியாது என, 4 மாதங்களுக்கு முன்பு கொங்கணாபுரம் ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் பாதிக்கப்பட்டு வந்த மக்கள், நேற்று, ஒன்றிய அலுவலகம் முன் தர்ணா போராட்டம் நடத்தினர். உடனே நடவடிக்கை எடுப்பதாக, பி.டி.ஓ., ரவிச்சந்திரன் கூற, மக்கள் கலைந்து சென்றனர்.