/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஹெச்.எம்., அறையில்குடிநீர் குழாய் உடைப்பு
/
ஹெச்.எம்., அறையில்குடிநீர் குழாய் உடைப்பு
ADDED : மார் 27, 2025 01:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹெச்.எம்., அறையில்குடிநீர் குழாய் உடைப்பு
தலைவாசல்:தலைவாசல், சாத்தப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில், நேற்று முன்தினம், பிளஸ் 2 படிக்கும், 101 மாணவ, மாணவியருக்கு தேர்வு முடிந்தது. மதியம், சில மாணவர்கள், தலைமை ஆசிரியர் அறைக்கு சென்று, பேனை உடைத்துள்ளனர். கை கழுவும் இடத்தில் குழாயை உடைத்ததால், தண்ணீர் வெளியேறி அந்த அறையில் தேங்கியது. இதில், 10ம் வகுப்பு உள்ளிட்ட மாணவர்களது, மாதிரி தேர்வு விடைத்தாள் நனைந்துள்ளன. இதுகுறித்த வீடியோ, சமூக வலைதளத்தில் நேற்று பரவியது. இச்செயலில் ஈடுபட்டவர்கள் குறித்து ஆசிரியர்கள் விசாரிக்கின்றனர்.