/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'வக்கீல்களுக்கு ஒற்றுமை தான் பலம்'
/
'வக்கீல்களுக்கு ஒற்றுமை தான் பலம்'
ADDED : மார் 30, 2025 01:42 AM
'வக்கீல்களுக்கு ஒற்றுமை தான் பலம்'
சேலம்:''வக்கீல்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். அதுதான் நம் பலம்,'' என, தமிழக வக்கீல் சங்க தலைவர் பிரபாகரன் பேசினார்.
தமிழ்நாடு - புதுச்சேரி வக்கீல் சங்க கூட்டமைப்பு, சேலம் வக்கீல் சங்கம் சார்பில், வக்கீல்கள் உரிமை மீட்பு மாநில மாநாடு, சேலத்தில் நேற்று நடந்தது. கூட்டமைப்பு சேர்மன் மாரப்பன் தலைமை வகித்தார். அதில் தமிழக வக்கீல் சங்கத்தலைவர் பிரபாகரன் பேசுகையில், ''வக்கீல்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். அதுதான் நம் பலம். நமக்குள் பிரிவினை காட்டாமல் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தவறான பயிற்சி முறையை ஊக்கப்படுத்தக்கூடாது. இளம் வக்கீல்கள் முறையாக பயிற்சி பெற வேண்டும்,'' என்றார்.
உயர்நீதிமன்ற, ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் பேசுகையில், ''வெளி மாநிலங்களில் சட்டம் படித்துவிட்டு வந்து இங்கு பதிவு செய்து பயிற்சியில் ஈடுபடுகின்றனர். அவர்கள், வெளி மாநிலங்களில்
படித்தார்களா, இல்லையா என தெரியாது. அதுபோன்ற நபர்களை கண்டறிந்து பார் கவுன்சிலில் பதிவு செய்வதை தடுக்க வேண்டும்,'' என்றார்.
தொடர்ந்து வக்கீல்கள் பாதுகாப்பு சட்டத்தை உறுதிப்படுத்தல்; சேம நல நிதி, 25 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்குதல்; போலீசாரால் வக்கீல்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை உடனே ரத்து செய்தல்; உயர்நீதிமன்றம் போல் மாவட்ட நீதிமன்றங்
களிலும் மூத்த வக்கீல்கள் பட்டியல் தயாரித்து அவர்களுக்கும் நீதிபதி பணி வாய்ப்பு உருவாக்குதல் என்பன உள்பட, பல்வேறு தீர்மானங்கள் நிறை
வேற்றப்பட்டன.கூட்டமைப்பு பொதுச்செயலர் காமராஜ், பொருளாளர் முரளிபாபு, செயலர் கார்த்திகேயன், சேலம் வக்கீல் சங்கத்தலைவர் விவேகானந்தன், செயலர் நரேஷ்பாபு, தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், துணைத்தலைவர் வேலு கார்த்திகேயன், உறுப்
பினர்கள் சரவணன், அய்யப்பமணி உள்பட பலர் பங்கேற்றனர்.