/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மா.கம்யூ., தியாகிகள்நினைவு ஜோதி பயணம்
/
மா.கம்யூ., தியாகிகள்நினைவு ஜோதி பயணம்
ADDED : ஏப் 01, 2025 01:42 AM
மா.கம்யூ., தியாகிகள்நினைவு ஜோதி பயணம்
எலச்சிபாளையம்:சேலம் மத்திய சிறையில், 1952 மார்ச், 11ல் நடந்த துப்பாக்கி சூட்டில், மா.,கம்யூ., கட்சி நிர்வாகிகள் உயிரிழந்தனர். அவர்களின் நினைவாக, சேலம் மத்திய சிறைச்சாலை முன் துவங்கிய ஜோதி பயணம், ராசிபுரம் வழியாக நேற்று, எலச்சிபாளையம் வந்தடைந்தது. அப்போது கட்சியினர், எலச்சிபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து பஸ் ஸ்டாப் வரை மலர்துாவி மரியாதை செலுத்தினர். அப்போது, நாளையும், நாளை மறுநாளும் மதுரையில் நடக்கவுள்ள, மா.கம்யூ., அகில இந்திய மாநாடு குறித்தும், நுாறு நாள் வேலை திட்டத்திலும், மாணவர்களுக்கு கல்வியிலும் நிதி வழங்காமல் தமிழகத்தை புறக்கணிக்கும் மத்திய அரசை கண்டித்தும் பேசினர்.

