/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சாலை மேம்பாட்டுபணிஎம்.எல்.ஏ., பூமி பூஜை
/
சாலை மேம்பாட்டுபணிஎம்.எல்.ஏ., பூமி பூஜை
ADDED : ஏப் 01, 2025 01:43 AM
சாலை மேம்பாட்டுபணிஎம்.எல்.ஏ., பூமி பூஜை
நாமக்கல்:நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஒன்றியத்தில், முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், புதுச்சத்திரம் முதல் அம்மா
பாளையம் வரையும், கோவிந்தம்பாளையம் முதல் கண்ணுார்பட்டி, கண்ணுார்பட்டி முதல் எடையப்பட்டி வரை, சாலை மேம்பாட்டு பணிக்கு, 3.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து, சாலைப்பணிக்கான பூமி பூஜை, நேற்று நடந்தது. எம்.எல்.ஏ., ராமலிங்கம் தலைமை வகித்து, சாலைப்
பணியை பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். முன்னாள் ஒன்றிய தலைவர் சாந்தி, ஒன்றிய கவுன்சிலர் முருகேசன், முன்னாள் பஞ்., தலைவர் கிருஷ்ணன், தி.மு.க., பொறியாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

