ADDED : ஏப் 02, 2025 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஏரியில் வாலிபர் சடலம் மீட்பு
சேலம்,:சேலம், குமரகிரி ஏரியில் நேற்று காலை ஒரு சடலம் மிதந்துகொண்டிருந்தது. இதுகுறித்து மக்கள் தகவல்படி, அம்மாபேட்டை போலீசார், செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு வீரர்களுடன் வந்து, பரிசல் மூலம் சென்று உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
விசாரணையில், இறந்து கிடந்தவர், அம்மாபேட்டை, விவேகானந்தர் தெருவை சேர்ந்த சேட்டு, 46, என்பதும், திருமணம் ஆகாததால் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் தெரிந்தது. தற்கொலை செய்து கொண்டாரா, தவறி விழுந்தாரா என, தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர்.

