தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ நீட் தேர்வு மாணவி தற்கொலை

நீட் தேர்வு மாணவி தற்கொலை

நீட் தேர்வு மாணவி தற்கொலை


ADDED : ஏப் 04, 2025 01:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 04, 2025 01:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நீட் தேர்வு மாணவி தற்கொலை

இடைப்பாடி:சேலம் மாவட்டம் கொங்கணாபுரம், பெரியமுத்தியம்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ், 43. தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரது மனைவி சந்திரா. இவர்களது மகள் சத்யா, 18, மகன் துளசிநாத்.

கடந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த சத்யா, நீட் தேர்வில் வெற்றி பெறவில்லை. நடப்பாண்டில் வெற்றி பெற, 10 மாதங்களாக ஜலகண்டாபுரத்தில் உள்ள பயிற்சி மையத்தில் படித்து வந்தார். இந்நிலையில் கடந்த, 31ல், வீட்டில் இருந்த சத்யா, எறும்பு பவுடரை குடித்துள்ளார். குடும்பத்தினர், அவரை மீட்டு இடைப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், நேற்று காலை உயிரிழந்தார்.

இதையடுத்து, கொங்கணாபுரம் போலீசில் செல்வராஜ் புகார் கொடுத்தார். அதில், 'மகள் சத்யா நீட் தேர்வுக்கு படித்து வந்தார். ஆனால் படிக்க முடியவில்லை என கூறி வந்தார். இதனால் வேறு படிப்பில் சேர்ந்து கொள்ளலாம் என ஆறுதல் கூறி வந்தேன். இருப்பினும் எறும்பு மருந்தை குடித்துவிட்டார்' என கூறியிருந்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

*******************************

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us