/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
உயிரியல் பூங்காவில்மீன் காட்சியகம் தயார்
/
உயிரியல் பூங்காவில்மீன் காட்சியகம் தயார்
ADDED : ஏப் 06, 2025 01:24 AM
உயிரியல் பூங்காவில்மீன் காட்சியகம் தயார்
சேலம்:சேலம், குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில், பறவைகள், பாலுட்டிகள், ஊர்வன உள்பட, 21 இனங்களை சேர்ந்த, 275 வன உயிரினங்கள் பராமரிக்கப்படுகின்றன. நடுத்தர பூங்காவாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில், புலி, கரடி உள்ளிட்ட விலங்குகளை கொண்டு வந்து பராமரிக்கும் பணி, விரிவாக்க பணி நடக்கின்றன. அதன்படி, 17 லட்சம் ரூபாய் செலவில் மீன் காட்சியகம் அமைக்கும் பணி, கடந்த மார்ச்சில் தொடங்கி, இரு மீன் தொட்டிகள், 4 தொட்டிகள் வைக்கப்பட்டு வருகின்றன. வண்ண மீன்கள், அரிய வகை மீன்கள் பராமரிக்கப்பட உள்ளன. இப்பணி முடிந்து, ஒரு வாரத்தில் மீன் காட்சியகம், மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

