தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ தண்டாயுதபாணி கோவிலில்பங்குனி திருவிழா தொடக்கம்

தண்டாயுதபாணி கோவிலில்பங்குனி திருவிழா தொடக்கம்

தண்டாயுதபாணி கோவிலில்பங்குனி திருவிழா தொடக்கம்


ADDED : ஏப் 06, 2025 01:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 06, 2025 01:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தண்டாயுதபாணி கோவிலில்பங்குனி திருவிழா தொடக்கம்

சேலம்:சேலம், அம்மாபேட்டை குமரகிரி தண்டாயுதபாணி கோவிலில், பங்குனி திருவிழாவுக்கு, கடந்த மார்ச், 12ல் முகூர்த்தக்கம்பம் நடப்பட்டது. விழாவின் தொடக்கமாக நேற்று, உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபி ேஷகம், அலங்காரம் செய்து பூஜை நடந்தது. இரவு 7:00 மணிக்கு உலக நன்மை வேண்டியும், விரைவில்

குமரகிரி கோவில் கும்பாபிேஷகம் நடக்க வேண்டியும், 108 சுமங்கலி பெண்கள், திருவிளக்கு பூஜையில் ஈடுபட்டனர். விழாவை ஒட்டி தினமும் உற்சவ மூர்த்திகளுக்கு விதவித அலங்காரங்களில் சிறப்பு பூஜைகள் நடக்க உள்ளன. வரும், 10ல், செந்தில் ஆண்டவர் நற்பணி குழு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். பங்குனி உத்திரமான, 11ல் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் காவடி எடுத்து வந்து கந்தனை வழிபடுவர். அன்று மதியம் அன்னதானம் வழங்கப்படும். இரவு பரதநாட்டிய நிகழ்ச்சி நடக்கும். 14ல் வீரபாகு மற்றும் கருப்பண்ண சுவாமிகள் ஆராதனை விழா, 16ல் திருவிழா நிறைவு பெறும். ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் ராஜதிலகம், அறங்காவலர் குழு தலைவர் ஆறுமுகம், செயலர் ராஜமாணிக்கம், பொருளாளர் செந்தில்நாதன் உள்ளிட்ட நிர்வாகிகள், கட்டளை உற்சவதாரர்கள் செய்து

வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us