/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காதலியின் படங்களைவெளியிட்ட காதலன் கைது
/
காதலியின் படங்களைவெளியிட்ட காதலன் கைது
ADDED : ஏப் 08, 2025 01:47 AM
காதலியின் படங்களைவெளியிட்ட காதலன் கைது
தலைவாசல்:காதலியின் படங்களை வெளியிட்ட காதலனை, போலீசார் கைது செய்தனர்.தலைவாசல் அருகே, வீரகனுாரை சேர்ந்தவர் சரவணன், 27. பட்டதாரியான இவரும், அதே பகுதியை சேர்ந்த பட்டதாரியான 21 வயது பெண்ணும் ஆறு ஆண்டுகளாக காதலித்து
வந்தனர். இருவரும் வெவ்வேறு பிரிவினர் என்பதால், இரு வீட்டு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், அந்த பெண்ணுக்கு வேறு இடத்தில் திருமணம் செய்வதற்கு
ஏற்பாடு நடந்துள்ளது.இதையறிந்த சரவணன், காதலித்தபோது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து, அந்த பெண் அளித்த புகார்படி, வீரகனுார் போலீசார்
வழக்குப்பதிவு செய்து, நேற்று சரவணனை கைது செய்தனர்.

