தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மணல் கடத்தியசரக்கு வேன் பறிமுதல்

மணல் கடத்தியசரக்கு வேன் பறிமுதல்

மணல் கடத்தியசரக்கு வேன் பறிமுதல்


ADDED : ஏப் 08, 2025 01:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 08, 2025 01:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மணல் கடத்தியசரக்கு வேன் பறிமுதல்

கெங்கவல்லி:கெங்கவல்லி அருகே, சரக்கு வேனில் மணல் கடத்திய மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.

கெங்கவல்லி அருகே, தெடாவூர் பிரிவு சாலையில் நேற்று இரவு கெங்கவல்லி போலீசார், வாகன சோதனை பணியில் ஈடுபட்டனர். அப்போது, 'மகேந்திரா - பிக்கப்' சரக்கு வேனை நிறுத்தாமல், போலீசார் மீது மோதுவது போல் சென்றனர்.

பதிவு எண் இல்லாத சரக்கு வேனை, பின் தொடர்ந்து சென்றபோது, வேனை நிறுத்தி விட்டு டிரைவர் உள்ளிட்டோர் தப்பியோடினர்.

அந்த வாகனத்தை சோதனை செய்தபோது, ஆற்று மணல் இருந்ததும், கெங்கவல்லி வழியாக செல்லும் சுவேத நதியில் மணல் கடத்தி வந்ததும் தெரியவந்தது. சரக்கு வேனை பறிமுதல் செய்த போலீசார், மணல் கடத்திய நபர்கள் குறித்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us