ADDED : ஏப் 10, 2025 02:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வழி தவறிவந்த பெண் மீட்பு
சேலம்:சேலம், சூரமங்கலம், ராமகவுண்டனுார் ஓடைவட்டத்தை சேர்ந்தவர் மணிமேகலை, 40. நேற்று முன்தினம் இரவு, ஆச்சாங்குட்டபட்டியில் போலீஸ் செக்போஸ்ட் சென்ற அவர், குடிக்க தண்ணீர் கேட்டார்.
இரவில் தனியே வந்த அவரிடம், ஏட்டு வெங்கடாஜலம் விசாரித்தபோது, சற்று மனநலம் பாதிக்கப்பட்ட பெண் என்பதும், வழிதவறி வந்ததும் தெரிந்தது. வெங்கடாஜலம் தகவல்படி, சூரமங்கலம் போலீசார், அங்கு சென்று மணிமேகலையை மீட்டு, அவரது பெற்றோரை வரவழைத்து ஒப்படைத்தனர்.

