/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
முறைகேடாக மின்சாரம்: பெண்ணுக்கு அபராதம்
/
முறைகேடாக மின்சாரம்: பெண்ணுக்கு அபராதம்
ADDED : ஏப் 12, 2025 01:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முறைகேடாக மின்சாரம்: பெண்ணுக்கு அபராதம்
கெங்கவல்லி:கெங்கவல்லியில் வீட்டு மின் இணைப்பில் இருந்து, வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்துவதாக, மின்வாரிய அலுவலகத்துக்கு புகார் சென்றது.
இதனால் சேலம் மின் திருட்டு தடுப்பு குழுவினர், நேற்று கெங்கவல்லியில் ஆய்வு செய்தனர்.அப்போது கிருஷ்ணவேணி என்பவரது வீட்டு மின் இணைப்பில் இருந்து, வணிக பயன்பாட்டுக்கு மின்சாரம் பயன்படுத்தியது தெரிந்தது. இதனால் அவருக்கு, 34,100 ரூபாய் அபராதம் விதித்தனர்.