/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பொதுத்தேர்வு நிறைவு: மாணவர்கள் மகிழ்ச்சி
/
பொதுத்தேர்வு நிறைவு: மாணவர்கள் மகிழ்ச்சி
ADDED : ஏப் 16, 2025 01:24 AM
பொதுத்தேர்வு நிறைவு: மாணவர்கள் மகிழ்ச்சி
சேலம்:தமிழகத்தில் கடந்த மார்ச், 28 முதல், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வந்தது. சேலம் மாவட்டத்தில், 522 பள்ளிகளில் இருந்து, 41,450 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். நிறைவாக சமூக அறிவியல் தேர்வு நேற்று நடந்தது. இத்தேர்வு மிக எளிதாக இருந்ததால், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். எதிர்பார்த்த வினாக்களும், புத்தக பின்புறம் உள்ள வினாக்களுமே கேட்கப்பட்டிருந்ததால், அதிக மாணவர்கள், 'சென்டம்' வாங்கும் சூழல் உள்ளது.
தேர்வு நிறைவடைந்ததால், சேலம் கோட்டை உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளிலும், உற்சாகத்துடன் வெளியே வந்த மாணவ, மாணவியர், நண்பர்களுடன், 'கேக்' வெட்டியும், கலர் பூசியும் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர். நண்பர்களின் சட்டையில், 'இங்க்' அடித்தும் கொண்டாடினர்.

