/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பக்தர்கள் சிரமமின்றி தரிசிக்க ஏற்பாடு
/
பக்தர்கள் சிரமமின்றி தரிசிக்க ஏற்பாடு
ADDED : ஏப் 19, 2025 01:34 AM
சேலம்:
சேலம் கோட்டை அழகிரிநாதர் கோவில் கும்பாபி ேஷக விழா நேற்று முதல் தொடங்கியது. அங்கு பாதுகாப்பு பணி குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். கோவில் அருகே அமைக்கப்பட்ட அன்னதான கூடம், பக்தர்கள் வரும் வழி, வானங்கள் நிறுத்தும் இடம் உள்ளிட்ட இடங்களை கமிஷனர் பார்வையிட்டு, பாதுகாப்பு குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
இதுகுறித்து பிரவீன்குமார் அபினபு கூறியதாவது: அழகிரிநாதர் கோவில் கும்பாபி ேஷக விழா, ஏப்., 20ல் நடக்க உள்ளது.
பக்தர்கள் எந்த சிரமமும் இல்லாமல், பெருமாளை தரிசிக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அன்னதான பகுதியில் கூட்ட நெரிசலை தவிர்க்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இரு, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த, தனித்தனி இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பக்தர்களுக்கு தேவையான குடிநீர், மருத்துவ வசதி, ஆம்புலன்ஸ், தீயனைப்பு வாகனம் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி குற்றச்சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளதால், சாதாரண உடையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவர். 4 உதவி கமிஷனர், 10 இன்ஸ்பெக்டர், 20 எஸ்.ஐ., 500 போலீஸ்காரர், பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். எந்த நேரத்திலும் மக்கள் போலீசாரை தொடர்பு கொண்டு, தேவைகளை தெரிவிக்கலாம். கும்பாபிேஷக விழா சிறப்பாக நடக்க, மக்களும் அமைதியான முறையில் வரிசையில் நின்று தரிசிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தெற்கு துணை கமிஷனர் வேல்முருகன் உடனிருந்தார்.

