ADDED : அக் 09, 2025 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், சோனா வள்ளியப்பா பப்ளிக் பள்ளியில் படிக்கும் மாணவர்களில், மாவட்ட, மாநில, தேசிய, சர்வதேச விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை பாராட்டி, கவுரவிப்பு விழா, பள்ளி வளாகத்தில் நடந்தது. சோனா கல்வி நிறுவன தலைவர் வள்ளியப்பா, இயக்குனர் கார்த்திகேயன், முதல்வர் கவிதா ஆகியோர், மாணவ, மாணவியருக்கு பரிசுகள், சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தனர்.
இதற்கு உறுதுணையாக இருந்த இயக்குனர் கார்த்திகேயன், முதல்வர் கவிதா உள்ளிட்ட ஆசிரியர்களை, சோனா நிறுவன தலைவர் வள்ளியப்பா பாராட்டினார். பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். விழாவை, பள்ளி விளையாட்டு துறை ஆசிரியை சோனியா செலஸ்டின், கீர்த்தனா ஒருங்கிணைந்து செயல்படுத்தினர்.