/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாணவியை கரம்பிடித்த பேக்கரி உரிமையாளர்
/
மாணவியை கரம்பிடித்த பேக்கரி உரிமையாளர்
ADDED : பிப் 26, 2026 05:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தலைவாசல்: தலைவாசல் அருகே வீரகனுார், தென்
கரையை
சேர்ந்த கந்தசாமி மகன் சதீஷ்குமார், 30. பேக்கரி கடை உரிமையாளர்.
அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் மகள் கலைமணி, 21, தனியார்
கல்லுாரியில், பி.எஸ்சி., 3ம் ஆண்டு படிக்கிறார். இவர்கள் காதலித்து
வந்த நிலையில், வீட்டை விட்டு வெளியேறி
திருமணம் செய்து கொண்டனர்.
நேற்று
முன்தினம், வீரகனுார் போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.
போலீசார், இருதரப்பு பெற்றோரை அழைத்து பேச்சு நடத்தினர்.
கலைமணியின் பெற்றோர் ஏற்கவில்லை. இதனால் சதீஷ்குமாருடன்,
கலைமணியை அனுப்பி வைத்தனர்.

