தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ திருக்கல்யாண உற்சவத்தில்திரளான பக்தர்கள் தரிசனம்

திருக்கல்யாண உற்சவத்தில்திரளான பக்தர்கள் தரிசனம்

திருக்கல்யாண உற்சவத்தில்திரளான பக்தர்கள் தரிசனம்


ADDED : ஏப் 26, 2026 06:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 26, 2026 06:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம், அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் எம்பெருமானார் உற்சவம் மற்றும் சித்திரை பிரமோற்சவம் கடந்த, 15ல் தொடங்கி நடந்து வருகிறது. அதில் தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது. தொடர்ந்து நேற்று மாலை, 6:00 மணிக்கு மேல், சவுந்தரராஜருக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

இதற்காக பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து பட்டாச்சாரியார்கள் வேத மந்திரம் சொல்லி, மாலை மாற்றும் வைபவத்தை நடத்தினர். பின் திருமாங்கல்ய பூஜை செய்து, பெருமாள் கரத்தில் தொட்டுக்

கொடுத்த மாங்கல்யத்தை, பட்டாச்சாரியார்கள், சுவாமி கழுத்தில் அணிவித்து கல்யாணத்தை நடத்தி வைத்தனர். திரளான பக்தர்கள், மணக்கோலத்தில் சவுந்தரராஜரை தரிசித்தனர்.

இன்று காலை, 11:00 மணிக்கு புனித நீர் நிரப்பப்பட்ட, 81 கலசங்கள் வைத்து சிறப்பு யாகவேள்வி நடத்தி, ஸ்தாபன திருமஞ்சனம், த்வாதச ஆராதனம் நடக்கிறது. இரவு சப்பரத்தில் சவுந்தரராஜர் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி, சப்தாவரண ஊர்வலம் நடக்கிறது. நாளை இரவு, 7:00 மணிக்கு பெருமாள் ஊஞ்சல் சேவை, வரும், 28 இரவு, எம்பெருமானார் ஊஞ்சல் சேவையுடன், 37ம் ஆண்டு பிரமோற்சவ விழா நிறைவு பெறும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us