sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மத்துாரில் வெளுத்து வாங்கிய கனமழை 10,000 கோழிகள் பலி; வீடுகளில் வெள்ளம்

/

மத்துாரில் வெளுத்து வாங்கிய கனமழை 10,000 கோழிகள் பலி; வீடுகளில் வெள்ளம்

மத்துாரில் வெளுத்து வாங்கிய கனமழை 10,000 கோழிகள் பலி; வீடுகளில் வெள்ளம்

மத்துாரில் வெளுத்து வாங்கிய கனமழை 10,000 கோழிகள் பலி; வீடுகளில் வெள்ளம்


ADDED : ஆக 13, 2024 07:37 AM

Google News

ADDED : ஆக 13, 2024 07:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி: மத்துார் அருகே, கோழிப்பண்ணைக்குள் புகுந்த மழைநீரில் மூழ்கி, 10,000 கோழிகள் பலியாகின.

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் சுற்று வட்டார பகுதிக-ளான மிண்டிகிரி, குள்ளம்பட்டி, கண்ணுகானுார், கண்ணன்ட-ஹள்ளி, வேலம்பட்டி பகுதிகளில் கடந்த, 2 நாட்களாக இரவில் மழை வெளுத்து வாங்கியது. நேற்று முன்தினம் இரவு பெய்த மழையில் மிண்டிகிரி அரசு உயர்நிலைப் பள்ளியில், மழை வெள்ளம் புகுந்தது.

அத்திகானுாரில், மழைநீர் வெளியேற வழியின்றி, 10க்கும் மேற்-பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. ஆத்திரமடைந்த மக்கள் கிருஷ்ணகிரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மத்துாரிலுள்ள பட்டாளம்மன் ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறி-யதில், சண்முகா நகரிலுள்ள, 50க்கும் மேற்பட்ட குடியிருப்பு-களில் தண்ணீர் புகுந்தது. மாரிசெட்டிஹள்ளி பஞ்.,க்கு உட்பட்ட கானாங்குட்டை ஏரி நிரம்பி உபரி நீர் விவசாய நிலங்களுக்குள் புகுந்ததால், அப்பகுதி மக்கள், அதில் மீன் குஞ்சுகளை விட்டு, நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்துார் அருகே குள்ளம்பட்டியில் ரஜினி என்பவரது கோழிப்-பண்ணைக்குள் மழைநீர் புகுந்து, 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 4,000 கோழிக்குஞ்சுகள் பலியாகின. அதேபோல், சின்னஆலேர-ஹள்ளியில் பாஸ்கர் என்பவரின் கோழிப்பண்ணைக்குள் புகுந்த மழைநீரால், 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 6,000 கோழிகள் பலியாகின.

மழை பாதித்த பகுதிகளை, போச்சம்பள்ளி தாசில்தார் மகேந்-திரன், ஆர்.ஐ., மலர்ச்செல்வி பார்வையிட்டு, மக்களுக்கு தேவை-யான உதவிகளை செய்தனர்.






      Dinamalar
      Follow us