/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஓடைகள் ஆக்கிரமிப்பு; 2 மடங்கு சுங்க வசூல் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு

ADDED : பிப் 01, 2025 01:16 AM
ஓடைகள் ஆக்கிரமிப்பு; 2 மடங்கு சுங்க வசூல் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு
சேலம், :சேலம் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்தார்.
அதில் விவசாயிகள் பேசியதாவது:
கடம்பூர் கருத்தாபிள்ளை: சுவேத நதிக்கு நீர் வரும் ஓடை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் கனமழை பெய்தபோதும் தண்ணீர் வரத்து இல்லை. ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.
புத்துார் அக்ரஹாரம் ராஜா: மணியனுார் வாரச்சந்தையில், விவசாயிகளிடம் இரு மடங்கு சுங்கம் வசூலிப்பதை தடுக்க வேண்டும். மாநகராட்சியே நேரடியாக வசூலிக்க வேண்டும்.
அபிநவம் ஜெயராமன்: புத்திரகவுண்டன்பாளையத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். அபிநவம் ஏரிக்கரைகளை சீரமைக்க வேண்டும்.
புளியங்குறிச்சி பெருமாள்: நடப்பாண்டு கனமழை பெய்தும் ஆணையம்பட்டி அணையில் இருந்து கடைகோடி பகுதிகளுக்கு தண்ணீர் வரவில்லை. மதகுகளை சரிசெய்து தண்ணீர் வரத்துக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நவப்பட்டி நாகராஜன்: மேட்டூர் மேற்கு கால்வாயில் அதிகளவில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. இதனால் விவசாயிகள் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படுவதால் முழுமையாக அகற்ற
வேண்டும். ஊனத்துார் பெரியண்ணன்: ஊனத்துாரில் உள்ள ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தலைவாசல் அருகே உரக்கடைகளில் இருப்பை வெளிப்படையாக தெரியப்படுத்தாமல் பதுக்கி வைக்கின்றனர். இதனால் கூடுதல் விலைக்கு விற்பனை நடப்பதால், தடுக்க
வேண்டும்.இவ்வாறு விவசாயிகள் பேசினர்.இதற்கு கலெக்டர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். டி.ஆர்.ஓ., ரவிக்குமார், வேளாண் இணை இயக்குனர் சிங்காரம், கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் பாரதி உள்ளிட்ட அதிகாரிகள்
பங்கேற்றனர்.