/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
20க்கு 40; 40க்கு 20 'வாட்ஸ்' மின்விளக்குகள் பொருத்தம் அ.தி.மு.க., கவுன்சிலர் குற்றச்சாட்டு
/
20க்கு 40; 40க்கு 20 'வாட்ஸ்' மின்விளக்குகள் பொருத்தம் அ.தி.மு.க., கவுன்சிலர் குற்றச்சாட்டு
20க்கு 40; 40க்கு 20 'வாட்ஸ்' மின்விளக்குகள் பொருத்தம் அ.தி.மு.க., கவுன்சிலர் குற்றச்சாட்டு
20க்கு 40; 40க்கு 20 'வாட்ஸ்' மின்விளக்குகள் பொருத்தம் அ.தி.மு.க., கவுன்சிலர் குற்றச்சாட்டு
ADDED : ஆக 31, 2024 01:15 AM
மேட்டூர்: ''வார்டில், 40 வாட்ஸ் மின்விளக்கு பொருத்த வேண்டிய இடத்தில், 20 வாட்ஸ் விளக்குகள், 20 வாட்ஸ் பொருத்த வேண்-டிய இடத்தில், 40 வாட்ஸ் விளக்குகள் பொருத்தியுள்ளனர்,'' என, அ.தி.மு.க., கவுன்சிலர் கலா குற்றம்சாட்டினார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் நகராட்சி கவுன்சிலர் கூட்டம் நேற்று நடந்தது. தி.மு.க.,வை சேர்ந்த, தலைவி சந்திரா தலைமை வகித்தார். அதில் நடந்த விவாதம் வருமாறு:தி.மு.க., கவுன்சிலர் செல்வன்: என் வார்டில் கம்பங்களில் மின்வி-ளக்குகள், 'டைமர்' குளறுபடியால், 24 மணி நேரமும் எரிகிறது. அதை சரிசெய்ய வேண்டும்.அ.தி.மு.க., கவுன்சிலர் கலா: என் வார்டில், 40 வாட்ஸ் மின்வி-ளக்கு பொருத்த வேண்டிய இடத்தில், 20 வாட்ஸ் எல்.இ.டி., விளக்குகள், 20 வாட்ஸ் பொருத்த வேண்டிய இடத்தில், 40 வாட்ஸ் மின் விளக்குகள் பொருத்தியுள்ளனர்.தி.மு.க., கவுன்சிலர் வெங்கடாசலம்: நகராட்சியில், 14 சாலைகளின் அகலம் குறை-வாக உள்ளதால் தார்ச்சாலை அமைக்க முடியாது என கூறியுள்-ளனர். அச்சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வார்டில் எங்கள் பகுதியில் சாலை,
மின்சார வசதிகள் உள்ளன. அதை பார்க்கும் மக்கள், கவுன்சிலர் வசிக்கும் சாலைக்கு மட்டும் நகராட்சி முக்கியத்துவம் கொடுப்பதாக கூறுகின்றனர். அனைத்து பகுதிகளுக்கும் சாலை, மின்விளக்குகளை பொருத்த வேண்டும்.
நகராட்சியில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதால் கட்டுப்ப-டுத்த வேண்டும்.கமிஷனர் நித்யா: சாலைகள் அமைக்கும் திட்டத்தில், 2 பணிகள் நிலுவையில் உள்ளன. அப்பணிகள் முடிந்ததும் மீதி இருக்கும் தொகையில், சாத்தியம் இருந்தால் நிறுத்தப்பட்டுள்ள சாலைகள் அமைக்கப்படும். நகராட்சியில், 3,600
விளக்குகள் பொருத்தப்-பட்டு, 70 சதவீத பணி முடிந்துள்ளது. கம்பங்களில் விளக்குகள் பொருத்தவும், கோளாறு சரிசெய்யவும் நடவடிக்கை எடுக்கப்-படும். நாய்கள் பெருக்கத்தை குறைக்க, குடும்ப கட்டுப்பாடு செய்வது குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.