/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
எஸ்.எஸ்.ஆர்.எம்., பள்ளியில் 22ம் ஆண்டு விளையாட்டு விழா
/
எஸ்.எஸ்.ஆர்.எம்., பள்ளியில் 22ம் ஆண்டு விளையாட்டு விழா
எஸ்.எஸ்.ஆர்.எம்., பள்ளியில் 22ம் ஆண்டு விளையாட்டு விழா
எஸ்.எஸ்.ஆர்.எம்., பள்ளியில் 22ம் ஆண்டு விளையாட்டு விழா
ADDED : ஆக 21, 2024 01:44 AM
எஸ்.எஸ்.ஆர்.எம்., பள்ளியில்
22ம் ஆண்டு விளையாட்டு விழா
சேலம், ஆக. 21-
சேலம், கருப்பூர் எஸ்.எஸ்.ஆர்.எம்., மேல்நிலைப்பள்ளியில், 22ம் ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. பள்ளி தலைவர் ஆண்டியப்பன் தலைமை வகித்து தேசியக்கொடியை ஏற்றினார். செயலர் சண்முகம், பொருளாளர் பன்னீர்செல்வமும் கொடியேற்றினர். தலைமை ஆசிரியர் குமார் வரவேற்றார்.
கருப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணையன், மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, ஒலிம்பிக் சுடரை ஏற்றி வைத்தார். தொடர்ந்து மாணவர்களின் போட்டிகள் நடந்தன. பெற்றோர், மாணவர்களை உற்சாகப்படுத்தினர். அதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, கேடயங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
கராத்தே, யோகா, சிலம்பாட்டம், இதர உடற்கல்வி போட்டிகளும் நடத்தப்பட்டன. பிரைமரி பள்ளி தலைமையாசிரியை அமுதா, ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.