/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலத்துக்கு ரூ.2,522 கோடி ஒதுக்கீடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் பேச்சு
/
சேலத்துக்கு ரூ.2,522 கோடி ஒதுக்கீடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் பேச்சு
சேலத்துக்கு ரூ.2,522 கோடி ஒதுக்கீடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் பேச்சு
சேலத்துக்கு ரூ.2,522 கோடி ஒதுக்கீடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் பேச்சு
ADDED : பிப் 23, 2025 01:33 AM
சேலத்துக்கு ரூ.2,522 கோடி ஒதுக்கீடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் பேச்சு
மேட்டூர்:''தமிழக அரசு, 4 ஆண்டுகளில் சேலம் மாவட்ட திட்டப் பணிகளுக்கு, 2,522 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது,'' என, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு பேசினார்.
சேலம் மாவட்டம் மேட்டூரில், 6.40 கோடி ரூபாய் செலவில், 69 கடைகளுடன் கூடிய புது பஸ் ஸ்டாண்ட், 1.95 கோடி ரூபாயில் நுாலகம், அறிவுசார் மையம் உள்பட சேலம் மண்டலத்தில், 71.68 கோடி ரூபாய் மதிப்பில் திட்டப்பணிகள் அடிக்கல் நாட்டு விழா, முடிவுற்ற பணிகள் தொடக்க விழா, நேற்று நடந்தது.
அப்பணிகளை தொடங்கி வைத்து, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு பேசியதாவது: ஊட்டியில், 1,000 கடைகள் கட்டிய நிலையில், 13 கோடி ரூபாய் வாடகை தருவதாக வியாபாரிகள் கூறினர். அந்த வழக்கு நீதிமன்றத்துக்கு சென்றது. அதன் உத்தரவுப்படி பொது ஏலம் விட்டபோது, 38 கோடி ரூபாய்க்கு கடைகள் ஏலம் போனது. அதனால் மேட்டூர் பஸ் ஸ்டாண்ட் கடைகள் வாடகை குறைப்பது தொடர்பாக, சேலம் கலெக்டரிடம் பேசியுள்ளேன். மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவமும், வியாபாரிகளிடம் பேசி வாடகை நிர்ணயித்தாலும், எங்களுக்கு ஆட்சேபனை இல்லை.
தமிழக அரசு, 4 ஆண்டுகளில் சேலம் மாநகராட்சியில், 1961.90 கோடி ரூபாய் செலவில் திட்டப்பணிகளை மேற்கொண்டுள்ளன. சேலம் மாவட்ட நகராட்சிகளில், 380.37 கோடி ரூபாய், டவுன் பஞ்சாயத்துகளில், 180.65 கோடி ரூபாய்க்கு திட்டப்பணிகள் நடந்துள்ளன. தவிர, 4 ஆண்டுகளில் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் பாலம், நீரேற்று நிலையம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்துள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.
சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் பேசுகையில், ''சேலம் மண்டலத்தில் உள்ள மாநகராட்சி, டவுன் பஞ்சாயத்து, ஊரக வளர்ச்சித்துறைகள் மூலம், முதல்வர் கடந்த, 4 ஆண்டுகளில் திட்ட பணி களுக்கு, 5,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார்,'' என்றார்.
எம்.பி.,க்கள் சேலம் செல்வகணபதி, தர்மபுரி மணி, சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், பா.ம.க.,வின், மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம், தி.மு.க.,வின், சேலம் கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கம், சேலம் மாநகராட்சி கமிஷனர் பாலசுப்ரமணியன்(பொ), சேலம் மண்டல நகராட்சிகளின் இணை இயக்குனர் அசோக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
முன்னதாக பஸ் ஸ்டாண்டில் இருந்து, கொளத்துார் அடுத்த செட்டிப்பட்டி, சேலம், தர்மபுரிக்கு, அமைச்சர் நேரு கொடியசைத்து, பஸ்களை அனுப்பி வைத்தார்.