ADDED : மார் 13, 2025 02:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போதை மாத்திரைவிற்ற 3 பேர் கைது
சேலம்:சேலம், அன்னதானப்பட்டி போலீசார், சண்முகா நகரில் நேற்று முன்தினம் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு நின்றிருந்த, 3 பேர், போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினர். உடனே விரட்டிச்சென்று போலீசார் பிடித்து விசாரித்ததில், சண்முகா நகரை சேர்ந்த தினேஷ்குமார், 20, தாதகாப்பட்டி கோபாலகிருஷ்ணன், 23, நாகராஜ், 20, ஆகியோர் என தெரிந்தது. அவர்களிடம், போதை ஊசி, 50 மாத்திரைகள் இருந்த நிலையில், விற்க முயன்றது தெரிந்தது. இதனால், 3 பேரையும் கைது செய்த போலீசார், மாத்திரைகள், ஊசியை பறிமுதல் செய்தனர்.