/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கத்தியை காட்டிபணம் பறித்த 3 பேருக்கு 'காப்பு'
/
கத்தியை காட்டிபணம் பறித்த 3 பேருக்கு 'காப்பு'
ADDED : மார் 18, 2025 02:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கத்தியை காட்டிபணம் பறித்த 3 பேருக்கு 'காப்பு'
மேட்டூர்:மேட்டூர், பி.என்.பட்டி டவுன் பஞ்சாயத்து ராமமூர்த்தி நகரை சேர்ந்த, கூலித்தொழிலாளி ராமன், 59. நேற்று காலை, 8:00 மணிக்கு வேலைக்கு செல்ல கோம்புரான்காடு எரிவாயு தகனமேடை அருகே நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த, 3 பேர், கத்தியை காட்டி மிரட்டி, ராமனிடம் இருந்த, 1,200 ரூபாயை பறித்துக்கொண்டு
தப்பினர். இதுகுறித்து ராமன் புகார்படி கருமலைக்கூடல் போலீசார் விசாரித்து, நேற்று கருமலைக்கூடலை சேர்ந்த லல்லு பிரசாத், 32, பூஞ்சோலை தெரு மேகநாதன், 28, செல்லப்பன்
தெரு பிரகாஷ், 25, ஆகியோரை கைது செய்தனர்.

