தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 'ஆர்.டி.ஐ., சட்ட விண்ணப்பத்துக்கு 30 நாளில் தகவல் தர வேண்டும்'

'ஆர்.டி.ஐ., சட்ட விண்ணப்பத்துக்கு 30 நாளில் தகவல் தர வேண்டும்'

'ஆர்.டி.ஐ., சட்ட விண்ணப்பத்துக்கு 30 நாளில் தகவல் தர வேண்டும்'


ADDED : மார் 28, 2025 01:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 28, 2025 01:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

'ஆர்.டி.ஐ., சட்ட விண்ணப்பத்துக்கு 30 நாளில் தகவல் தர வேண்டும்'

சேலம்:சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பொது தகவல் அலுவலர்கள், மேல் முறையீட்டு அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது.

மாநில தலைமை தகவல் ஆணையர் ஷகீல் அக்தர் தலைமை வகித்து பேசியதாவது:அரசு, அதன் உதவி பெறும் நிறுவனங்கள், துறைகள், அலுவலகங்கள், வெளிப்படை தன்மையுடன் செயல்படுவதை உறுதிப்படுத்தும்படி, மக்களுக்கு தேவையான தகவல்களை, தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் வழங்க வழி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கோரப்படும் விண்ணப்பத்துக்கு, 30 நாளில் தகவல் அளிக்க வேண்டும். அதற்குள் பதில் தராவிட்டால், கோரிய தகவல்களை மறுத்ததாகவே கொள்ளப்படும். கோரிய தகவல் ஒருவரது உயிர் அல்லது சுதந்திரம் தொடர்புடையதானால், 48 மணி நேரத்தில் தகவல் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.கலெக்டர் பிருந்தாதேவி, போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு, எஸ்.பி., கவுதம் கோயல் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us