/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
5 ஆண்டுக்கு முன் பூட்டப்பட்ட கோவில் 2 கிராம மக்களிடம் நடத்திய பேச்சு தோல்வி
/
5 ஆண்டுக்கு முன் பூட்டப்பட்ட கோவில் 2 கிராம மக்களிடம் நடத்திய பேச்சு தோல்வி
5 ஆண்டுக்கு முன் பூட்டப்பட்ட கோவில் 2 கிராம மக்களிடம் நடத்திய பேச்சு தோல்வி
5 ஆண்டுக்கு முன் பூட்டப்பட்ட கோவில் 2 கிராம மக்களிடம் நடத்திய பேச்சு தோல்வி
ADDED : ஜூலை 06, 2024 06:56 AM
ஏற்காடு : ஏற்காட்டில் இருந்து, 23 கி.மீ.,ல் உள்ள வெள்ளக்கடை ஊராட்-சியில், ஆணைக்காடு, பெரியேரிக்காடு கிராமங்கள் உள்ளன. அங்கு பழமையான அம்மன் கோவில் உள்ளது. அக்கோவிலில், 5 ஆண்டுகளுக்கு முன், ஆணைக்காடு, பெரியேரிக்காடு கிராம மக்கள் வழிபட்டனர்.
அப்போது பெரியேரிக்காடு மக்கள், 'கோவில் எங்களுக்கு சொந்த-மானது. ஆணைக்காடு மக்களுக்கு சம்பந்தம் இல்லை' என கூறி பூட்டினர். தொடர்ந்து ஆணைக்காடு மக்களும், 'எங்களுக்கு சொந்-தமானது' என கூறி அவர்களும் கோவிலை பூட்டினர். இருவரும் தனித்தனியே கோவிலை பூட்டியதால், 5 ஆண்டாக யாரும் வழி-பட முடியாமல் போய்
விட்டது.
தற்போது இரு கிராமத்திலும் சிலர், கோவிலை திறக்கக்கோரி ஏற்-காடு தாசில்தாரிடம் மனு அளித்தனர். தொடர்ந்து தாசில்தார் ரமேஷ்குமார், இரு கிராமத்தினரையும் அழைத்து பேச்சு நடத்-தினார். அப்போது இரு கிராமத்தினரும், கோவில் தங்களுக்கே சொந்தம் என கூறியதால் முடிவு எட்டப்படவில்லை.
இந்நிலையில் கோவிலில் நேற்று, தாசில்தார் ரமேஷ்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் பேச்சு நடத்தினர். அதிலும் இரு கிராம மக்களும் சமரசம் ஆகாததால், பேச்சு தோல்வி அடைந்தது.
இதையடுத்து, 10 நாட்களுக்கு பின் மீண்டும் பேச்சு நடத்தப்-படும் என, தாசில்தார் கூற, அனைவரும் கலைந்து சென்றனர். ஆனால் கோவிலில் வழிபட தயாராக வந்த ஆணைக்காடு மக்கள், கோவில் வெளியே பூஜை நடத்தி வழிபட்டு சென்றனர்.