/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
3 மாதத்தில் ரயில்வேக்கு ரூ.75 கோடி வருவாய்
/
3 மாதத்தில் ரயில்வேக்கு ரூ.75 கோடி வருவாய்
ADDED : ஜூலை 07, 2024 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம் : சேலம் ரயில்வே கோட்டத்தில் சேலம், கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட ஸ்டேஷன்களில், 'பார்சல்'கள் ஏற்றப்படுகின்-றன. நடப்பாண்டு ஏப்ரல் முதல் ஜூனில், 1,26,251 குவிண்டால் பார்சல் மூலம், 4.87 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டு, 1,03,053 குவிண்டல் பார்சல் மூலம், 4.62 கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருந்தது.
அதேபோல் நடப்பாண்டு ஏப்ரல் முதல் ஜூனில், 6,97,559 டன் சரக்குகளை ஏற்றி அனுப்பியதால், 70.30 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இதில் பெட்ரோலிய பொருட்கள், சிமென்ட், எஃகு உள்ளிட்டவை அடங்கும் என, சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.