/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேளம் அடிக்கும் தொழிலாளி செக்கான் ஏரியில் மூழ்கி பலி
/
மேளம் அடிக்கும் தொழிலாளி செக்கான் ஏரியில் மூழ்கி பலி
மேளம் அடிக்கும் தொழிலாளி செக்கான் ஏரியில் மூழ்கி பலி
மேளம் அடிக்கும் தொழிலாளி செக்கான் ஏரியில் மூழ்கி பலி
ADDED : ஆக 20, 2024 03:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்: மேட்டூர், கோனுார் ஊராட்சி, சந்தைதானம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மேளம் அடிக்கும் தொழிலாளி மனோஜ்குமார், 35. மனைவி பிரியங்கா, 20. தம்பதியருக்கு மூன்று வயதில் பெண் குழந்தை உள்ளது. நேற்று காலை, 11:00 மணிக்கு மது போதையில் இருந்த மனோஜ்குமார் அருகிலுள்ள செக்கான் ஏரிக்கு சென்று குளித்துள்ளார்.
அப்போது ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்ற அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். அவரது தாய் ராணி கொடுத்த புகார்படி, கருமலைக்கூடல் போலீசார் மனோஜ்குமார் உடலை ஏரியில் இருந்து மீட்டு, பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.