sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

4 தொகுதியில் நாளை முதல் 23 வரை அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்

/

4 தொகுதியில் நாளை முதல் 23 வரை அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்

4 தொகுதியில் நாளை முதல் 23 வரை அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்

4 தொகுதியில் நாளை முதல் 23 வரை அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்


ADDED : செப் 09, 2024 07:16 AM

Google News

ADDED : செப் 09, 2024 07:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: ஆத்துார், கெங்கவல்லி, ஏற்காடு, வீரபாண்டி ஆகிய சட்டசபை தொகுதிகளில் வரும், 10 முதல், 23 வரை, அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் நடக்க உள்ளது.3

இதுகுறித்து, அ.தி.மு.க.,வின் சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் அறிக்கை:கெங்கவல்லி தொகுதி: செப்., 10(நாளை) காலை, 10:00 மணிக்கு தேவியாக்குறிச்சியில் கூட்டம் நடக்க உள்ளது. அதில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேச உள்ளார். 17 காலை இலுப்பநத்தத்தில் முன்னாள் அமைச்சர் மோகன்; 22 காலை, 10:00 மணிக்கு தம்மம்பட்டி, மதியம், 12:00 மணிக்கு கெங்கவல்லி கிழக்கு ஒன்றியத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச உள்ளனர்.

ஆத்துார் தொகுதி: 10(நாளை) மாலை, 4:00 மணிக்கு ஆத்துாரில் முன்னாள் அமைச்சர் உதயகுமார்; 17 மதியம், 12:00 மணிக்கு தென்னங்குடிபாளையத்தில் முன்னாள் அமைச்சர் மோகன்; 20 காலை ஈச்சம்பட்டி, மதியம் பெத்தநாயக்கன்பாளையத்தில் முன்னாள் அமைச்சர் அன்பழகன்; 21 காலை, நரசிங்கபுரம், விநாயகபுரத்தில் முன்னாள் அமைச்சர் சிவபதி; மதியம், கருமந்துறையில் முன்னாள் அமைச்சர் அருணாசலம் பேசுவர்.

ஏற்காடு தொகுதி: 22 மாலை, 4:00 மணிக்கு அயோத்தியாப்பட்டணத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்; 23 காலை வாழப்பாடி; மதியம் அயோத்தியாப்பட்டணத்தில் முன்னாள் அமைச்சர் செம்மலை பேச உள்ளனர்.

வீரபாண்டி தொகுதி: 12 காலை முருங்கப்பட்டி, மதியம் எஸ்.பாலத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி; 13 காலை நெய்க்காரப்பட்டி, மதியம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலர் பரமசிவம் பேசுவர். இதில் முன்னாள், இன்னாள் எம்.எல்.ஏ., - எம்.பி.,க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாவட்ட நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும்.






      Dinamalar
      Follow us