sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஊட்டச்சத்து நிறைந்த பாரம்பரிய நெல் ரகம் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு அறிவுரை

/

ஊட்டச்சத்து நிறைந்த பாரம்பரிய நெல் ரகம் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு அறிவுரை

ஊட்டச்சத்து நிறைந்த பாரம்பரிய நெல் ரகம் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு அறிவுரை

ஊட்டச்சத்து நிறைந்த பாரம்பரிய நெல் ரகம் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு அறிவுரை


ADDED : ஆக 19, 2024 06:13 AM

Google News

ADDED : ஆக 19, 2024 06:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி: ஊட்டச்சத்துகள், மருத்துவ குணங்கள் நிறைந்த பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி செய்து தோல் நீக்கி அரிசியாக விற்றால் நல்ல விலை கிடைக்கும் என, விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்-பட்டுள்ளது.

இதுகுறித்து பனமரத்துப்பட்டி வட்டார வேளாண் உதவி இயக்குனர் வேலு கூறியதாவது:பாரம்பரிய நெல் ரகங்களில் எண்ணற்ற ஊட்டச்-சத்துகள், மருத்துவ குணங்கள் அடங்கி உள்ளன. அவை அனைத்து வகை தட்பவெப்ப நிலைகளை தாங்கி வளரக்கூடிய, பூச்சி நோய் எதிர்ப்பு திறன் கொண்டது. குறைந்த அளவு சர்க்கரை, அதிகளவு நார்ச்சத்து அடங்கியுள்ளதால் நீரிழிவு, இருதயம், உடல் பருமன் ஆகிய பாதிப்புகளை குறைக்கின்-றன. கரையாத நார்ச்சத்து உள்ளதால் புற்று-நோய்க்கு எதிராக உடலை பாதுகாக்கிறது. உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. உரமிடுதல், பூச்சிக்கொல்லி பயன்படுத்துதல் மிக குறைவு. பாரம்பரிய நிறமிகு அரிசி வகைகள், வெள்ளை அரிசியை விட, 3 மடங்கு அதிக துத்த-நாகம், இரும்பு சத்துகளை கொண்டுள்ளன.

முக்கிய ரகங்கள்கவுனி அரிசி: இது சோழர் காலத்தில் அதிகம் பயிரிடப்பட்டது. உடலை வலுப்பெறச் செய்கி-றது. இரும்பு சத்து அதிகளவில் உள்ளதால் கர்ப்-பிணியருக்கு சுகப்பிரசவம் நடக்க அந்த காலத்தில் அதிகம் கொடுக்கப்பட்டது.கிச்சடி சம்பா: பயிரிட்டு, 140 நாட்களில் மகசூல் தரும் சம்பா ரகம். ஏக்கருக்கு, 1,125 கிலோ அரிசி கிடைக்கும். வெள்ளை நிறம் கொண்டது. பூச்சி, நோய் எதிர்க்கும் திறன் உண்டு.

பூங்கார்: இது குறுகிய கால சம்பா ரகம். மணல் கலந்த மண் ஏற்றது. வறட்சியை எதிர்க்கும் திறன் கொண்ட ரகம். இட்லி, தோசைக்கு ஏற்றது. கர்ப்பிணியருக்கு சுகப்பிரசவம் நடக்க கொடுக்-கப்படுகிறது.

காட்டு யானம்: 180 நாட்கள் வளரக்கூடியது. இட்லி, தோசை செய்ய ஏற்றது. உடலை வலு பெறச்செய்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவுகிறது. காட்டு யானம் தவிட்டில் செய்யப்படும் கசாயம் மருந்-தாக பயன்படுகிறது. சாகுபடி செய்த பாரம்பரிய நெல் ரகங்களை தோல் நீக்கி, அரிசியாக மாற்றி விற்றால் நல்ல விலை கிடைக்கும். பனமரத்துப்பட்டி வேளாண் விரிவாக்க மையத்தில் பாரம்பரிய நெல் விதைகள் மானியத்தில் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us