/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கோபி ஆர்.டி.ஓ., ஆபீசில் லஞ்ச ஒழிப்பு சோதனை 7 புரோக்கர்களிடம் ரூ.1.30 லட்சம் பறிமுதல்

ADDED : செப் 07, 2024 08:17 AM
கோபி: கோபி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில், ஏழு புரோக்கர்கள் சிக்கினர். அவர்க-ளிடம், 1:30 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்டம் கோபி வட்டார போக்குவரத்து அலுவலகம் பொலவக்காளிபாளையத்தில் இயங்குகிறது. இங்கு பணிபுரியும் ஊழியர்கள், மாமூல் வாங்குவதாக, ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் சென்றது. இந்நிலையில் கோவை மாவட்ட ஆய்வுக்குழு ஆய்வாளர் சதீஸ்குமார், ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி., ராஜேஷ், இன்ஸ்-பெக்டர் ரேகா அடங்கிய குழுவினர், கோபி வட்டார போக்குவ-ரத்து அலுவலகத்துக்குள், நேற்று மதியம், 12:30 மணிக்கு அதிரடி-யாக நுழைந்தனர்.
அப்போது பணியில் மோட்டார் வாகன ஆய்வாளர் (பொறுப்பு) குணசேகரன், அலுவலக ஊழியர்கள் இருந்தனர். அவரவர் இருக்-கையிலேயே அமர்ந்திருக்க அறிவுறுத்தப்பட்டனர். அதன் பின் குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின்போது அலுவலகத்தின் பிரதான கதவு மூடப்பட்டது. மதியம் தொடங்-கிய சோதனை, இரவு, 8:00 மணிக்கு நிறைவடைந்தது.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியதாவது: சோத-னையின் போது அலுவலகத்தில், புரோக்கர்களாக செயல்பட்ட ஏழு பேர் இருந்தனர். அவர்களிடம், 1.30 லட்சம் ரூபாய் பறி-முதல் செய்யப்பட்டது. இவர்கள் மீதும், மோட்டார் வாகன ஆய்-வாளர் மீதும் வழக்குப்பதிவு செய்து, துறை ரீதியாக விசாரணை நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.