/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தமிழில் பெயர் பலகை வைத்தால் பாராட்ட முடிவு
/
தமிழில் பெயர் பலகை வைத்தால் பாராட்ட முடிவு
ADDED : ஆக 26, 2024 02:55 AM
ஓமலுார்: ஓமலுார் தமிழ் சங்க பொதுக்குழு கூட்டம், அதே பகுதியில் நேற்று நடந்தது. தலைவர் முத்துசாமி தலைமை வகித்தார்.
அதில், கவுரவ தலைவரான, முன்னாள் எம்.எல்.ஏ., தமிழரசு முன்னிலையில், 2024 - 25ம் ஆண்டு செயல் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டது. தமிழில் பெயர் பலகை வைப்போருக்கு பாராட்டுதல்; தாரமங்கலம், காடையாம்பட்டியில் தமிழ் சங்கம் தொடங்குதல்; தமிழில் அதிக மதிப்பெண் பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு விருது, சான்றிதழ் வழங்குதல் உள்-ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்ந்து, 1,330 திருக்குறளை, பனை ஓலையில் எழுதி, 'இன்-டர்நேஷனல் பிரைடு புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' சாதனை படைத்த, கொங்குபட்டி அரசு பள்ளி ஆசிரியர் பாஸ்கர் கவுரவிக்கப்-பட்டார். சங்க செயலர் ராஜேந்திரசோழன், பொருளாளர் கலைச்-செல்வன், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.