sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கால்நடை தீவன அபிவிருத்தி திட்டத்தில் மானியம் பெற விவசாயிகளுக்கு அழைப்

/

கால்நடை தீவன அபிவிருத்தி திட்டத்தில் மானியம் பெற விவசாயிகளுக்கு அழைப்

கால்நடை தீவன அபிவிருத்தி திட்டத்தில் மானியம் பெற விவசாயிகளுக்கு அழைப்

கால்நடை தீவன அபிவிருத்தி திட்டத்தில் மானியம் பெற விவசாயிகளுக்கு அழைப்


ADDED : ஜூலை 07, 2024 01:24 AM

Google News

ADDED : ஜூலை 07, 2024 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீரபாண்டி, : ஒருங்கிணைந்த கால்நடை தீவன அபிவிருத்தி திட்டத்தில் மானியம் பெற கால்நடை வளர்ப்போர், விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கால்நடைத்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை:

சேலம் மாவட்டத்தில் கால்நடை தீவன பற்றாக்குறையை தீர்க்க, பசுந்தீவன உற்பத்தியை அதிகரிக்க, பல்வேறு திட்டங்கள் செயல்-படுத்தப்படுகின்றன. 2024 - 25ம் ஆண்டில் சேலம் மாவட்-டத்தில் ஒருங்கிணைந்த தீவன அபிவிருத்தி திட்டத்தில் பசுந்தீ-வன உற்பத்தி பரப்பை, 275 ஏக்கராக விரிவுபடுத்த இலக்கு நிர்-ணயிக்கப்பட்டுள்ளது. இதில் கால்நடை வளர்ப்போருக்கு நீர்பா-சன வசதியுள்ள தென்னை, பழ தோட்டங்களில் அரை ஏக்கர் முதல் ஒரு ஹெக்டேர் வரை தீவன பயிர்களான சோளம், கம்பு, நேப்பையர் ஒட்டுப்புல், பல்லாண்டு பயறு வகை அல்லது தீவன புல் வகைகளில் ஏதேனும் ஒரு பயிரை 3 ஆண்டுகள் ஊடுபயிராக சாகுபடி செய்தால் பராமரிப்பு மானியமாக ஏக்கருக்கு, 3,000 ரூபாய் வழங்கப்படும்.

இத்திட்டத்தில் சிறு, குறு விவசாயிகள், எஸ்.சி., எஸ்.டி., பிரிவி-னருக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட உள்ளது. மொத்த பயனாளிகளில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு, 30 சதவீதம் ஒதுக்கப்படும். தகுதியான பயனாளிகள் மானிய உதவி பெற வரும், 15க்குள் அருகே உள்ள கால்நடை மருந்த-கங்கள் அல்லது கால்நடை உதவி மருத்துவர்களை தொடர்பு கொண்டு படிவம் பெற்று விண்ணப்பிக்கலாம்.






      Dinamalar
      Follow us