/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாநகராட்சியில் ரூ.20.67 கோடி பணிகளை முதல்வர் துவக்கி வைப்பு
/
மாநகராட்சியில் ரூ.20.67 கோடி பணிகளை முதல்வர் துவக்கி வைப்பு
மாநகராட்சியில் ரூ.20.67 கோடி பணிகளை முதல்வர் துவக்கி வைப்பு
மாநகராட்சியில் ரூ.20.67 கோடி பணிகளை முதல்வர் துவக்கி வைப்பு
ADDED : ஆக 13, 2024 08:01 AM
சேலம்: சேலம் மாநகராட்சி பகுதிகளில், ரூ.20.67 கோடி மதிப்பில் உபரி நீர் கால்வாய், வகுப்பறை கட்டடம் உள்ளிட்ட நிறைவு பெற்ற, 24 பணிகளை முதல்வர் ஸ்டாலின், காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
சேலம் அம்மாபேட்டை மண்டலத்தில், 1.77 கோடி ரூபாய் மதிப்பில் அல்லிக்குட்டை ஏரியில் உபரி நீர் வெளியேறும் கால்வாய் பணி, கோட்டை மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்-பள்ளியில், 96 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டடம், அய்யந்திருமாளிகை மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், 30 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டடம், சின்ன கொல்-லப்பட்டி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், 35 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை.
மாநகராட்சி பகுதிகளில், 8.27 கோடி ரூபாய் மதிப்பில், 300 புதிய தெரு விளக்கு கம்பங்கள் அமைத்து, மின் கம்பத்திலிருந்து இணைப்பு மாற்றும் பணி மற்றும் 800 புதிய தெரு விளக்கு பொருத்தும் பணி உள்ளிட்ட, 24 பணிகள், 20.67 கோடி ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டது.
நிறைவுற்ற பணிகளை, முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். சேலம் கோட்டை ஆண்கள் மேல்நி-லைப்பள்ளியில் நடந்த விழாவில், மேயர் ராமச்சந்திரன், கலெக்டர் பிருந்தாதேவி, கமிஷனர் ரஞ்ஜீத் சிங், எம்.எல்.ஏ., ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.