/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
முதல்வர் கோப்பை விளையாட்டு 25க்குள் முன்பதிவு செய்ய அழைப்பு
/
முதல்வர் கோப்பை விளையாட்டு 25க்குள் முன்பதிவு செய்ய அழைப்பு
முதல்வர் கோப்பை விளையாட்டு 25க்குள் முன்பதிவு செய்ய அழைப்பு
முதல்வர் கோப்பை விளையாட்டு 25க்குள் முன்பதிவு செய்ய அழைப்பு
ADDED : ஆக 08, 2024 09:04 AM
சேலம்: சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை: நடப்பாண்டு முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பல்வேறு புது விளையாட்டுகள் சேர்க்கப்பட்டு பள்ளி, கல்லுாரி மாணவ, மாண-வியர், மாற்றுத்திறனாளிகள், மக்கள், அரசு ஊழியர்கள் என, 5 பிரிவுகளில், 27 விளையாட்டுகள், 53 வகைகளில் நடத்தப்பட உள்ளன. செப்டம்பரில் தொடங்கி அக்டோபர் வரை, மாவட்ட, மண்டல, மாநில அளவில் போட்டிகள் அடுத்தடுத்து நடக்க உள்-ளன. இதில் பங்கேற்க, https://sdat.tn.gov.in என்ற இணையத-ளத்தில் முன்பதிவு செய்து அதற்கான ஆவணங்களை பதி-வேற்றம் செய்ய வேண்டும்.
மாநில அளவில் தனி நபர் போட்டியில் வென்றால் முதல் பரிசு ஒரு லட்சம் ரூபாய், 2வது பரிசு, 75,000 ரூபாய், 3ம் பரிசு, 50,000 ரூபாய் வழங்கப்படும். குழு போட்டியில் முதல் பரிசு, 75,000, 2வது பரிசு, 50,000, 3ம் பரிசு, 25,000 ரூபாய் வழங்கப்-படும். இதில், 12 முதல், 19 வயதுடைய, பள்ளி மாணவர்கள், 17 முதல், 25 வயதுடைய, கல்லுாரி மாணவர்கள், 15 முதல், 35 வயது வரை, பொதுப்பிரிவினர், அனைத்து வயது மாற்றுத்திறனா-ளிகள், அரசு ஊழியர்கள் பங்கேற்கலாம். முன்பதிவு செய்ய வரும், 25 கடைசி நாள். இதுதொடர்பாக மாவட்ட விளையாட்டு அலுவலரை, 95140 - 00777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.