/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கன மழையால் துண்டான தற்காலிக மண் சாலை மாணவ, மாணவியர் அவதி; கிராம மக்கள் மறியல்
/
கன மழையால் துண்டான தற்காலிக மண் சாலை மாணவ, மாணவியர் அவதி; கிராம மக்கள் மறியல்
கன மழையால் துண்டான தற்காலிக மண் சாலை மாணவ, மாணவியர் அவதி; கிராம மக்கள் மறியல்
கன மழையால் துண்டான தற்காலிக மண் சாலை மாணவ, மாணவியர் அவதி; கிராம மக்கள் மறியல்
ADDED : ஆக 13, 2024 08:04 AM
ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே, கன மழையால் துண்டான தற்கா-லிக மண் சாலையால், மாணவ, மாணவியர் நேற்று பள்ளி செல்ல மிகவும் சிரமப்பட்டனர். கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த, தல்-சூரில் இருந்து குருபட்டி கிராமத்திற்கு தார்ச்சாலை செல்கிறது. இதில் புதிய தரைப்பாலம் பணிக்கு டெண்டர் விடப்பட்டு, கடந்த இரு மாதங்களுக்கு முன் பணி துவங்கப்பட்டது. புதிய பாலம் கட்ட சாலை குறுக்கே பள்ளம் தோண்டியதால், வாகன ஓட்டிகள் சென்று வர, அருகில் தற்காலிக மண் சாலை அமைத்-தனர். தேன்கனிக்கோட்டை பகுதிகளில் நேற்று முன்தினம் இரவில், 47 மி.மீ., அளவிற்கு பெய்த கனமழையில், அந்த தற்கா-லிக மண் சாலை மழைநீரில் அடித்து செல்லப்பட்டு சாலை துண்-டாகியது. குருபட்டி கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிர் பெரிதும் சிரமப்பட்டனர்.
மண் சாலையில், மழைநீர் அரித்து உருவான பள்ளத்தில் இறங்-கிய அப்பகுதி இளைஞர்கள், பள்ளி மாணவ, மாணவியரை துாக்கி விட்டு சாலையை கடக்க உதவினர். இரு மாதங்களுக்கு மேலாகியும் பாலப்பணியை துவங்காமல் கிடப்பில் போட்ட-தால்தான் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறி, தேன்கனிக்கோட்டை - அய்யூர் சாலை தல்சூர் பகுதியில், குருபட்டி கிராம மக்கள், 200க்கும் மேற்பட்டோர் நேற்று காலை, 8:00 மணிக்கு சாலைம-றியலில் ஈடுபட்டனர்.
தேன்கனிக்கோட்டை இன்ஸ்பெக்டர் தவமணி பேச்சுவார்த்தை நடத்தி, பாலப்பணியை துவங்கி, விரைவில் முடிக்க, அதிகாரிக-ளிடம் தெரிவிப்பதாகவும், தற்காலிக மண் சாலையை, உடனடி-யாக சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார். இதையடுத்து கிராம மக்களின் மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.

