/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சந்தன மரங்களை வெட்டிய எட்டு பேர் சேலத்தில் கைது
/
சந்தன மரங்களை வெட்டிய எட்டு பேர் சேலத்தில் கைது
ADDED : ஆக 13, 2024 07:59 AM
சேலம்: கோவையில் சந்தன மரங்களை வெட்டிய எட்டு பேர், சேலத்தில் கைது செய்யப்பட்டனர்.
கோவை, சாய்பாபா காலனி பகுதியில் சந்தன மரங்களை மர்ம நபர்கள் சிலர், நேற்று காலை வெட்டினர். துடியலூர் போலீசார் செல்வதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. போலீசார் விசாரணையில், அவர்கள் சேலத்திற்கு பஸ்சில் செல்வதாக தகவல் கிடைத்தது, துடியலூர் போலீசார், சேலம் மாநகர போலீ-சாருக்கு தகவல் தெரிவித்தனர். சேலம் போலீசார் புதிய பஸ் ஸ்டாண்டில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கோவையில் இருந்து பஸ்சில் இறங்கிய எட்டு பேரை பிடித்து விசாரித்தனர், அதில் அவர்கள் சந்தன மரங்களை வெட்டியது தெரியவந்தது.
மேலும் நடத்திய விசாரணையில், அவர்கள் வாழப்பாடி பேலாப்பாடியை சேர்ந்த சதாசிவம், 38, குமார், 43, வெங்கட்ராமன், 35, மாரப்பன், 32, சுப்ரமணி, 35, மதி, 38, கந்த-சாமி, 44, வரதராஜன், 34, என்பது தெரிய வந்தது. அனைவ-ரையும் கைது செய்து, துடியலூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

