/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
முதல்வர் கோப்பை போட்டி பதிவு செய்ய அவகாசம் நீட்டிப்பு
/
முதல்வர் கோப்பை போட்டி பதிவு செய்ய அவகாசம் நீட்டிப்பு
முதல்வர் கோப்பை போட்டி பதிவு செய்ய அவகாசம் நீட்டிப்பு
முதல்வர் கோப்பை போட்டி பதிவு செய்ய அவகாசம் நீட்டிப்பு
ADDED : ஆக 25, 2024 01:26 AM
முதல்வர் கோப்பை போட்டி
பதிவு செய்ய அவகாசம் நீட்டிப்பு
சேலம், ஆக. 25-
சேலம் மாவட்ட அளவில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி, செப்டம்பரில் நடக்க உள்ளது. அதில் பல்வேறு புது விளையாட்டுகள் சேர்க்கப்பட்டு பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், மாற்றுத்திறனாளி, மக்கள், அரசு ஊழியர் என, 5 பிரிவுகளில், 27 விளையாட்டுகள், 53 வகைகளில் நடத்தப்படுகின்றன. மாவட்டத்தில் வெற்றி பெற்றோர் மண்டல போட்டிக்கும், அடுத்து மாநில போட்டிக்கும் அனுப்பப்படுவர்.
இதில் பங்கேற்க, https://sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். 12 முதல், 19 வயது வரை பள்ளி மாணவர்கள்; 17 முதல், 25 வயது வரை கல்லுாரி மாணவர்கள்; 15 முதல், 35 வயது வரை பொதுப்பிரிவினர், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் பங்கேற்கலாம். முன்பதிவுக்கு இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது செப்., 2 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக, சேலம் கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.