தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பனங்காலி ரக மஞ்சள் விலை சரிவு

பனங்காலி ரக மஞ்சள் விலை சரிவு

பனங்காலி ரக மஞ்சள் விலை சரிவு


ADDED : ஆக 24, 2024 07:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 24, 2024 07:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆத்துார்: சேலம் மாவட்டம் ஆத்துார், புதுப்பேட்டை வேளாண் உற்பத்தி-யாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் மஞ்சள் ஏலம் நேற்று நடந்தது. சுற்றுவட்டார விவசாயிகள், 1,128 குவிண்டால்(ஒரு குவிண் டால், 100 கிலோ) மஞ்சளை கொண்டு வந்தனர். ஆத்துார், சேலம், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட பகுதி வியாபா-ரிகள், தரத்துக்கு ஏற்ப விலை நிர்ணயித்தனர்.

குவிண்டால் விரலி ரகம், 13,569 முதல், 16,919 ரூபாய்; உருண்டை ரகம், 12,589 முதல், 14,139 ரூபாய்; பனங்காலி(தாய் மஞ்சள்), 13,669 முதல், 15,989 ரூபாய் வரை விலைபோனது. 1,128 குவிண்டால் மஞ்சள் மூலம், 1.55 கோடி ரூபாய்க்கு வர்த்-தகம் நடந்தது. கடந்த வாரத்தை விட குவிண்டால் விரலி ரகம், 490 ரூபாய் விலை அதிகரித்தது. அதேநேரம் உருண்டை ரகம், 490, பனங்காலி, 1,380 ரூபாய் விலை சரிந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us