ADDED : ஆக 01, 2024 08:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: டில்லியில் நேற்று மாலை ஒரு மணி நேரத்திற்குள், 10 செ.மீ.,க்கும் அதிகமாக கொட்டித்தீர்த்த கனமழையால், நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாகின. வானிலை மையம் டில்லிக்கு, 'ரெட் அலெர்ட்' விடுத்-தது.
டில்லி பார்லிமென்ட் வளாகம் அமைந்துள்ள பகுதி, ஐ.டி.ஓ., சந்-திப்பு, கன்னாட் பிளேஸ், மோதி பாக் மேம்பாலம் உள்ளிட்ட பிர-தான சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதனால் டில்லி முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விமான சேவைகளும் கடுமையாக பாதிக்கப்-பட்டன; 10க்கும் மேற்பட்ட விமானங்கள் திருப்பி விடப்பட்-டன. இதற்கிடையே, வானிலை மையம் டில்லிக்கு ரெட் அலெர்ட் விடுத்தது. வரும், 5 வரை டில்லி, அதன் சுற்று வட்டா-ரப்பகுதிகளில் கனமழை நீடிக்கும் என
எச்சரிக்கை விடுத்துள்ளது.