ADDED : ஆக 31, 2024 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி, அம்மாபாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில், 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
அப்பகுதியில் உள்ள ஏரியில் இருந்து மண் ஏற்றி செல்லும் கனரக டிப்பர் லாரிகளால், பள்ளி முன் உள்ள சாலை சேறு, சகதியாக மாறி மாணவ, மாணவியர் சிரமத்துக்கு ஆளாகினர். இதுகுறித்து நேற்று முன்தினம் நமது
நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக, பனமரத்துப்பட்டி ஒன்றிய கமிஷனர் கார்த்தி-கேயன், பள்ளி முன் சாலையை நேற்று ஆய்வு செய்தார்.உடனே அவரது நடவடிக்கையால் ஈரப்பதம் கொண்ட ஜல்லி கலவை, 10 யுனிட் கொட்டப்பட்டு, புல்டோசர் மூலம் சமன்ப-டுத்தப்பட்டது. மழைநீர் தேங்காதபடி சீரமைத்து வடிகால் வசதி ஏற்படுத்தப்பட்டது. இதற்கு ஒன்றியம்
மூலம், 10,000 ரூபாய் செலவானதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.