/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வீட்டின் பூட்டை உடைத்து ஐந்து பவுன் நகை திருட்டு
/
வீட்டின் பூட்டை உடைத்து ஐந்து பவுன் நகை திருட்டு
ADDED : ஆக 20, 2024 03:16 AM
சேலம்: கன்னங்குறிச்சி அருகே, வீட்டின் பூட்டை உடைத்து ஐந்து பவுன் நகை திருடப்பட்டுள்ளது.
சேலம், கன்னங்குறிச்சி போட்டான் குறிச்சி கேசவன் நகரை சேர்ந்தவர் பரமசிவம், 70, இவர் மனைவி உதயகுமாரி, 65. கடந்த, 14ம் தேதி பரம சிவத்திற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை உதயகுமாரி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தார்.
அங்கு பீரோவில் வைத்திருந்த ஐந்து பவுன் நகையை மர்மநபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.இது குறித்து, கன்னங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.* கன்னங்குறிச்சியை சேர்ந்த ராமசாமி, 63, என்பவரின் வீட்டின் பூட்டு, நேற்று முன்தினம் உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், பணம், நகையை தேடியுள்ளனர். எதுவும் இல்லாததால் அங்கிருந்து தப்பினர்.
கன்னங்குறிச்சி போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்

