ADDED : ஆக 26, 2024 02:56 AM
சேலம்: தே.மு.தி.க., நிறுவனர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா, சேலம் மாநகர் மாவட்டம் சார்பில் கிச்சிப்பாளையத்தில் கொண்டாடப்-பட்டது. பகுதி செயலர் விஜய் தலைமை வகித்தார். அவைத்த-லைவர் செல்வம், தேவர் முன்னிலை வகித்தனர்.
அதில் மாநகர் மாவட்ட செயலர் ராதாகிருஷ்ணன், விஜயகாந்த் படத்துக்கு மலர்துாவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கட்சி நிர்வாகிகள், விஜயகாந்த் படத்துக்கு மரியாதை செலுத்தி, மக்க-ளுக்கு இனிப்பு வழங்கினர். மேலும், 300க்கும் மேற்பட்ட ஏழை மக்களுக்கு இலவச சேலை வழங்கப்பட்டன. தொடர்ந்து அன்ன-தானம் நடந்தது. இதில் மாநகர் மாவட்ட துணை செயலர் சுகுமார், சீனிவாசன், பேபி வெங்கடாஜலம், செயற்குழு, பொதுக்-குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழி இழந்த மாணவர்
அதேபோல் அயோத்தியாப்பட்டணம் தெற்கு ஒன்றிய செயலர் வெங்கடேசன் தலைமையில் கட்சியினர், அங்குள்ள விழி இழந்தோர் பள்ளி மாணவ, மாணவியருக்கு புத்தாடை வழங்-கினர். தொடர்ந்து காலை உணவு வழங்கப்பட்டது. சேலம் கிழக்கு மாவட்ட செயலர் இளங்கோவன் உள்பட பலர் பங்கேற்-றனர். அயோத்தியாப்பட்டணம் பஸ் ஸ்டாப் அருகே விஜயகாந்த் படத்துக்கு, கட்சியினர் மரியாதை செலுத்தினர்.
மேலும் ஏற்காடு பஸ் ஸ்டாண்டில், ஒன்றிய செயலர் சுரேஷ்-குமார், தே.மு.தி.க., கொடியேற்றி மக்களுக்கு இனிப்பு வழங்-கினார். தொடர்ந்து டி.இ.எல்.சி., பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. பின் மக்களுக்கு அன்னதானம் வழங்கி, விஜயகாந்த் பிறந்தநாளை கட்சியினர் கொண்டாடினர்.