நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்: மல்லியக்கரை ஆரம்ப சுகாதார நிலையம், ஆத்துார் ஆதவன் லயன்ஸ் கிளப் சார்பில், சுகாதார நிலைய வளாகத்தில் உலக தாய்ப்பால் வார விழா நேற்று கொண்டாடப்பட்டது.
வட்டார மருத்துவ அலுவலர் விஜயபாஸ்கர், தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். தொடர்ந்து, 30க்கும் மேற்பட்ட தாய், சேய்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டன. கிளப் தலைவர் கருப்பண்ணன், செயலர்கள் அகிலன், பாண்டியன் உள்-பட பலர் பங்கேற்றனர்.

