நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார்: ஓமலுார், காடையாம்பட்டி, காருவள்ளி, டேனிஷ்பேட்டை, காமலாபுரம், சக்கரைசெட்டிப்பட்டி, நாலுகால் பாலம் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் சாமந்தி பூக்களை பயிரிட்டுள்ளனர். சில நாட்களாக பெய்து வரும் மழையால் பூக்கள் பாதிக்கப்படும் என, அவற்றை பறித்து, அதிகளவில், பூசாரிப்பட்டி மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வந்தனர். நேற்று மட்டும், 25 டன் பூக்கள் கொண்டுவரப்பட்டன. சாமந்தி பூ கிலோ, 60 முதல், 120 ரூபாய், கோழிக்கொண்டை, 50 முதல், 60 ரூபாய் வரை விற்பனையானது.
இதுகுறித்து பூசாரிப்பட்டி விவசாயி கோபி கூறுகையில், ''கடந்த ஆண்டு கிலோ, 200 ரூபாய்க்கு மேல் விற்றது. தற்போது தொடர் மழையால், அதிகபட்சம், 120 ரூபாய்க்கு மேல் விற்பனை ஆகவில்லை. இதனால் லாபமின்றி போனது,'' என்றார்.

