ADDED : பிப் 20, 2025 01:44 AM
முதியவர் மர்மச்சாவு
அ.பட்டணம்:சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அடுத்த மின்னாம்பள்ளி, பெரியார் நகரை சேர்ந்தவர் சின்னதம்பி, 81. இவர், இளைய மகன் வெங்கடேஷ், 47, என்பருடன் தங்கியிருந்தார். மூத்த மகன் செல்லப்பன், 48, மின்னாம்பள்ளியில் உள்ள காட்டில் குடும்பத்துடன் தங்கி உள்ளார்.
நேற்று காலை, 10:00 மணிக்கு செல்லப்பன், சின்னதம்பிக்கு உணவு கொடுத்துவிட்டு பணிக்கு சென்றார். மாலை, 4:00 மணிக்கு வந்தபோது, உடலில் ரத்த காயங்களுடன் சின்னதம்பி கிடந்தார். ஆம்புலன்ஸூக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் வந்து பார்த்துவிட்டு, சின்னதம்பி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
'முன்விரோதத்தில் அருகில் உள்ளவர்கள் தாக்கியதில் சின்னதம்பி உயிரிழந்ததாக சந்தேகம் உள்ளது' என, செல்லப்பன், காரிப்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் ஆய்வு செய்து விசாரித்தனர். நிபுணர்கள், தடயங்களை சேகரித்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'தடயவியல் நிபுணர்கள் அறிக்கையில் சந்தேகம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர், வலிப்பு வந்து விழுந்து இறந்திருக்கலாம். இருப்பினும் விசாரணை நடக்கிறது' என்றனர்.

